1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (16:43 IST)

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த புடலங்காய் !!

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும். புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

புடலங்காய் இலைச் சாற்றை சிறிது எடுத்து நீருடன் கொத்தமல்லியையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் குணபடுத்தும்.
 
இதய கோளாறு உள்ளவர்கள் புடலங்காய் இலையின் சாறு எடுத்து தினமும் 2 டேபிள் ஸ்புன் அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்தபட்ட நோய்கள் சரியாகும்.
 
புடலங்காய் இலையானது குடல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கும் புடலங்காய் மிகவும் சிறந்தது.
 
புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
 
புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது. தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
 
புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.