1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கற்றாழை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

கற்றாழை சரும ஆரோக்கியத்திற்கு மட்டும் தான் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை விளைவிக்கும்.

செரிமான கோளாறுகள் ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை சாறு குடித்து வாருங்கள்.  இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.
 
இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு, சோற்றை சர்க்கரையுடன் அல்லது தேன் கலந்து நன்றாக மிக்சியில்  அரைத்து, கரண்டியளவு சாப்பிட தீரும்.
 
கற்றாழை சாறு தயாரிக்கும் முறை: மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லைப் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து  நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பானத்தை காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால்  உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
 
கற்றாழை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
 
பலருக்கு கண் வறட்சி, மங்கலான பார்வை, கண் அழற்சி போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, கற்றாழையில் கண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ஏ மற்றும் கண்களில் உள்ள செல்களுக்கு புத்துயிர் அளித்து, கண்களின் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும்.
 
இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்  கொள்ளலாம்.
 
மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவர்கள், கற்றாழை சாறுடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது மலத்தை  மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியாக உடலில் இருந்து வெளியேறி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.
 
கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக  வெளியேற்றிவிடும்.


 
கற்றாழையில் உள்ள மருத்துவ பண்புகள் சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. அத்தகைய கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு  பயன்படுத்துவதோடு, சரும ஆரோக்கியம் மற்றும், அழகும் அதிகரித்துக் காணப்படும். இதனால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
 
 உடல் எடையை சரியான அளவில் பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, இயற்கையாகவே  உடல் எடை குறையும்.
 
வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்துடன் இருப்பது மிகவும் அவசியம். தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கற்றாழையில்  உள்ள சாப்போனின்கள் இரண்டும் ஒன்று சேர்ந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும்.
 
வயது அதிகரிக்கும் போது, உடலில் உள்ள செல்கள் மெதுவாக சீரழிய ஆரம்பிக்கும். இதன் அறிகுறியாக இளமையிலேயே முதுமையான தோற்றம், உடல் பலவீனம், ஞாபக மறதி போன்றவற்றை சந்திக்கக்கூடும். ஆனால் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடித்தால், இந்த  கலவையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள், செல்கள் சீரழிவது தடுக்கப்பட்டு, உடற்செல்கள் ஆரோக்கியமாக  இருக்கும்.