இது நானா என என்னை நானே கிள்ளி பார்த்தேன்..! - சிம்ரன் நெகிழ்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிம்ரன் தோற்றமளித்த பேட்ட படத்தின் முன்றாவது போஸ்டருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்துவருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பேட்ட. பேட்ட படத்தின் புதிய போஸ்டர் நேற்று மதியம் 12. 30 மணிக்கு சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
அந்த போஸ்டரில் ரஜினியும், சிம்ரனும் சந்தோஷமாக நடந்து வருவது போன்று இருந்தது. மேலும் பேட்ட படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாவதை உறுதி செய்யும் விதத்தில் பொங்கலுக்கு பராக் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
இந்நிலையில் நடிகை பேட்ட பட போஸ்டரை பார்த்த சிம்ரன், நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது உண்மையா என்று என்னை நானே கிள்ளினேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மட்டுமல்லாது படத்தில் நடிக்கும் நடிகர்களான த்ரிஷா மற்றும் சசிகுமார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை பதிவிட்டுள்ளனர்.