பல்வேறு சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள அகத்திக்கீரை !!
ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும். அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை நிவாரணம் கிடைக்கும்.
அகத்தி கீரையைப் சாறு பிழிந்து அதன் சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பித்தால் கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.
இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகளவு நிறைந்து உள்ளது. பால் சுரப்பு அதிகம் இல்லாத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.
அகத்தி கீரை வயிற்றுப் புண் நோயைக் குணப்படுத்தும். உடலில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். மேலும் அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்தும் இயல்புடைய இந்த அற்புத கீரையை குடல்புண், தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி உள்ள மக்கள் பச்சையாக மென்று சாற்றை விழுங்கினால் வந்த நோய்கள் பறந்து போகும். தோல் நோய்களை குணப்படுத்துகிறது.
Edited by Sasikala