1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Launches 100% Subsidy Milch Cow and Goat Schemes for Rural Women

100% மானியத்தில் கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்கள்.. தமிழக அரசு முடிவு...

மகளிர் நலத் திட்டம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஊரக மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்த 100% மானியத்தில் கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
 
கறவை மாடு வழங்கும் திட்டத்தில் ரூ.50,000 மதிப்புள்ள பசு, 2 வருட காப்பீடு மற்றும் போக்குவரத்து, தீவனச் செலவுக்கு ரூ.3,000 வழங்கப்படும். 18 முதல் 60 வயதுக்குட்பட்ட மகளிர் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்; ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் அல்லது ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளோர் விண்ணப்பிக்க முடியாது. இது 50 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும்.
 
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தில் ரூ.30,000 மதிப்புள்ள 5 ஆடுகள், 2 வருட காப்பீடு, போக்குவரத்து மற்றும் தீவனத்துக்கு ரூ.2,500 மற்றும் ஓராண்டுக்குப் பிறகு ரூ.2,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். குறிப்பிட்ட முன்னுரிமைப் பிரிவினர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்; நிலம் அல்லது ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளோருக்குத் தகுதியில்லை. இத்திட்டம் 100 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும்.
 
தகுதியான ஊராட்சி ஒன்றிய விவரங்களை கால்நடை பராமரிப்புத் துறை இணையதளத்தில் (ahd.tn.gov.in) பார்த்து, tnahschemes.tn.gov.in மூலம் அல்லது அருகிலுள்ள கால்நடை நிலையங்கள் வழியாக டிசம்பர் 17, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இனி பள்ளிகளுக்கு என்னென்ன வேண்டும் என்பதை பெற்றோர்களே முடிவு செய்வார்கள்.. அதிரடி மாற்றம்...