1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (08:10 IST)

கெஜ்ரிவாலை ஏன் கைது செய்யவில்லை என கேட்டது காங்கிரஸ் தான்.. பினராயி விஜயன்

மதுபான ஊழல் வழக்கில் மணிஷ் சிசோடியாவை கைது செய்த அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி கேட்டதே காங்கிரஸ்தான் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விஷயத்தில் பாஜகவோடு காங்கிரஸ் கைகோர்த்துள்ளது என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டபோது கெஜ்ரிவாலை ஏன் கைது செய்யவில்லை என காங்கிரஸ் கேட்டதாகவும் இந்த விவகாரத்தை பொருத்தவரை கெஜ்ரிவால் அனுபவம் காங்கிரஸுக்கு ஒரு மிகப்பெரிய வாழ்க்கை பாடம் என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதில் காங்கிரஸின் அணுகுமுறை சரியில்லை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

மேலும் வயநாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர் போட்டியிடும் போது அவரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவது என்ன மாதிரி நியாயம்? என்று கேள்வி எழுப்பிய பினராயி விஜயன் அவர் பாஜகவை எதிர்த்து ஏன் போட்டியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
 
இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி ராஜா மனைவியை அன்னி ராஜாவை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்றால் அவர் இந்திய கூட்டணியை மதிக்கவில்லை என்று தானே அர்த்தம் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva