1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. court extended arvind kejriwal custody

ஒரு முதல்வரை கைது செய்ய 4 சாட்சியங்கள் போதுமா? நீதிமன்றத்தில் தானாகவே வாதாடிய கெஜ்ரிவால்..!

arvind kejriwal
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை கைது செய்ய வெறும் நான்கு சாட்சியங்கள் போதுமா என நீதிமன்றத்தில் டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் தானாகவே வாதாடிய நிலையில் அவருக்கு மேலும் 4 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
அப்போது அவருக்கு  நீதிமன்றத்தில் பேச சில நிமிடங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத் துறை அழிக்கப் பார்க்கிறது என்றும்,  எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என சொல்லவில்லை என்றும், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்டதில் ஒரு ரூபாய் கூட மீட்கவில்லை என்றும் வாதாடினார்.
 
இந்த வழக்கில் 4 சாட்சிகள் மட்டுமே இருக்கும் நிலையில் பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய 4 சாட்சிகள் போதுமானதா? என்றும் கேள்வி எழுப்பினர். அவருடைய இந்த வாதங்களுக்கு பின் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
83% இளைஞர்களுக்கு வேலையில்லை: பிரியங்கா காந்தி அடுக்கடுக்கான கேள்விகள்..!