ரூ.138 கோடி லாபம் ஈட்டிய சொமேட்டோ!
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோ 2023-24 ஆம் நிதியாண்டின் 3 வது காலாண்டில் ரூ.138 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக உள்ளது சொமோட்டோ.
இந்த நிறுவனம் மக்கள் மத்தியில் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வளர்ச்சியடைந்துள்ளது.
உணவு டெலிவரியில் ஊபர், சொமோட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், 2023-2024 ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டில் ரூ.138 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் (2023-2023) இதே 3 வது 3 வது காலாண்டில் சொமேட்டோ நிறுவனம் ரூ.347 கோடி நஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.