திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (12:06 IST)

குடும்பத்தோடு காதலி ஆடையை கிழித்து மரத்தில் கட்டி வைத்த அதிர்ச்சி சம்பவம்.. 4 பேர் கைது..!

beat
இளைஞர் ஒருவர் காதலியை தனது வீட்டிற்கு வரவழைத்து குடும்பத்தோடு ஆடையை கிழித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜார்கண்ட் மாநிலத்தில் 26 வயது பெண் ஒருவரை அவரது காதலன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என  அவரது காதலனும் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவரும் சரமாரியாக  தாக்கி உள்ளனர்
 
இதனை அடுத்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அந்த பெண்ணை தூக்கி சென்று ஆடைகளை கிழித்து கிழிந்த ஆடைகளை கொண்டு மரத்தில் கட்டி வைத்தனர். இரவுக்குள் அந்த பெண் இறந்து விடுவார் என்று அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அந்த பெண் மீட்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காதலன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்
 
Edited by Siva