ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (07:43 IST)

ஆட்சியை கைப்பற்றியது ராணுவம், அதிபர் கைது.. அரசியல் சாசனம் கலைப்பு: நைஜீரியாவில் பதட்டம்..!

நைஜீரியா நாட்டில் திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாட்டில் முகமது பசோவ்ம் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்றி அதிபரையும் கைது செய்துள்ளது. அதுமட்டுமின்றி நைஜீரிய நாட்டின்  அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நைஜீரியா நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும் நைஜீரியா நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் நைஜீரிய நாட்டில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருப்பதால் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva