வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (14:57 IST)

மட்டன் சமோசாவிற்காக கூகுள் வேலையை தூக்கி எறிந்த இளைஞர்!!

தனது தாயார் சமைக்கும் மட்டன் சமோசாவை விற்பதற்காக தனக்கு கூகுள் நிறுவனத்தில் இருந்த வேலையை துறந்து உள்ளார் மும்பை இளைஞர்.


 
 
முனாப் கபாடியா ஒரு எம்பிஏ பட்டதாரி. இவர் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். என்ன காரணமோ தெரியவில்லை தனது தாயார் சமைக்கும் உணவுகளை வைத்து உணவகம் ஒன்றை நடந்த திட்டமிட்டார்.
 
உணவை பற்றி மக்களின் கருத்தை அறிய தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை உணவு உண்ண விருந்திற்கு அழைத்துள்ளார். விருந்தினர்களின் கருத்தில் சமாதானம் ஆகாத முனாப் பேஸ்புக் மூலம் Word of Mouth என்ற பக்கத்தை துவங்கி அதன் மூலம் பல மக்களின் கருத்துகளை கணக்கில் கொண்டார்.
 
பின்னர், பலர் உணவை பாராட்டியதும் போஹ்ரி கிட்சென் என்ற பெயரில் உனவகத்தை துவங்கினார். அவர் நினைத்தது போலவே, உணவகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 
 
இதனால் உணவக விற்பனையில் பிஸியான முனாப் வேறு வழியின்றி தனது கூகுள் வேலையை விட்டு விட்டு முழு நேர உணவக விற்பனையாளராக மாறியுள்ளார். இந்த உணவக தொழிலுக்கு தனது தாயார் செய்த மட்டன் சமோசா தான் காரணமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.