ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (14:18 IST)

திருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த இளம்பெண்

திருமணமான ஒரே மாதத்தில் கணவரை விட்டுவிட்டு காதலனை பெண் ஒருவர் கரம்பிடித்த சம்பவம் கேரளாவில் நடைப்பெற்றுள்ளது.

 

 
கடந்த மாதம் கேரளா கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அவரது காதலன் வெளிநாடு சென்றதாலும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் காதலனை திருமணம் செய்ய முடியாமல் போனது. 
 
இதையடுத்து பெற்றோரின் நெருக்கடியால் கோழிக்கோடு அருகே பானுரை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். அவரது திருமணம் ஊரே திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண் சந்தோஷம் இல்லாமல் இருந்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் காதலன் துபாயில் இருந்து ஊர் திரும்பியுள்ளார். காதலிக்கு திருமணம் நடந்தது தெரியாமல் அவரை பார்க்க வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் காதலிக்கு திருமணம் ஆனது தெரியவந்துள்ளது. பின்னர் காதலியை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
 
இளம்பெண் தனது காதலுடன் யாருக்கும் தெரியாமல் நீதிபதி வீட்டிற்கு சென்று எங்களை சேர்ந்து வையுங்கள் என்று கூறி அழுதுள்ளார். உடனே நீதிபதி காவல்துறையினரை தொடர்பு கொண்டு அந்த பெண் யாருடன் வாழ்கிறேன் என்று கூறுகிறாரோ அவருடன் சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
 
அதன்படி காவல் நிலையத்திற்கு தனது காதலுடன் சென்ற பெண் நடந்தவற்றை கூறி, தனக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். நான் எனது காதலுடன் வாழ விரும்புகிறேன் என எழுதி கொடுத்துள்ளார்.
 
இவையெல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். கடமைக்கு என்னுடன் வாழ்வதை விட காதலித்தவரை கைப்பிடிப்பதுதான் சரி என கூறி வாழ்த்தி அனுப்பியுள்ளார்.