புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (12:30 IST)

இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரம் - நடிகை புவனேஸ்வரி சிக்குகிறார்?

இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக நடிகை புவனேஸ்வரி மீது புகார் கூறப்பட்டுள்ளது.


 

 
விபச்சார வழக்கில் பல முறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் நடிகை புவனேஸ்வரி. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
எனது 23 வயது மகள் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் சென்னை செல்வதாக கூறி விட்டு சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுபற்றி திருச்சி போலீசாரிடம் புகார் அளித்தேன். அதன் பின் சுமித்ரா என்பவர் என்னை தொடர்பு கொண்டு அவரது சகோதரன் மிதுன் சீனிவாசன் என்பவரும், எனது மகளும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
 
அந்நிலையில், நடிகை புவனேஸ்வரியின் கட்டுப்பாட்டில் இருந்த எனது மகளை மீட்டு கடந்த ஆகஸ்டு மாதம் என்னிடம் திருச்சி போலீசார் ஒப்படைத்தனர். அப்போது, முகநூல் மூலம் பழக்கமான மிதுன் சீனிவாசனின் பேச்சியில் மயங்கி தான் சென்னை சென்றதாகவும், அங்கு தன்னை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் என் மகள் தெரிவித்தார்.
 
இந்நிலையில், ஆகஸ்டு 17ம் தேதி என் மகளை மீண்டும் காணவில்லை. இது தொடர்பா சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகை புவனேஸ்வரியின் பிடியில் என் மகள் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. என் மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனு விசாரணைகு வந்த போது, மனுதாரரின் மகள் நேரில் ஆஜராகி தனக்கும், மிதுன் சீனிவாசனுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்தார். ஆனால், மனுதாரரரின் வழக்கறிஞர் ‘ புவனேஸ்வரி மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவரின் கட்டுப்பாட்டில்தான் அந்த பெண் இருக்கிறார். அவரை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி சுய நினைவை இழக்க செய்துவிட்டனர்” என வாதாடினார்.
 
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் உண்மையை அறிய நடிகை புவனேஸ்வரி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை 30ம் தேதி ஒத்தி வைப்பதாகவும், அன்று புவனேஸ்வரி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
 
இந்த வழக்கில் புவனேஸ்வரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது வழக்கு பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.