1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (09:53 IST)

மதகுரு அளித்த குல்லாவை அணிய மறுத்த யோகி ஆதித்யநாத்

உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கவிஞர் சந்த் கபீர் தாஸ் சமாதிக்குச் சென்றபோது தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட குல்லாவை அணிய மறுத்துவிட்டார்.
கவிஞர் சந்த் கபீரின் 500-ஆவது நினைவு தின அஞ்சலிக்காக பிரதமர் நரேந்திர மோடியின்  வருகையையொட்டி, முதல்வர் யோகி ஆதித்யநாத் அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடச் சென்றார். அப்போது அங்கிருந்த மதகுரு யோகி ஆதியநாத்துக்கு அன்பளிப்பாக குல்லாவை அவரின் தலையில் அணியச் சென்றார். 
 
ஆனால் யோகி அதனை அணிவதற்கு மறுத்ததாக தெரிகிறது. இதேபோல் மோடி முதல்வராக இருந்தபோது மதகுரு ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய குல்லாவை அணிய மறுத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.