திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (06:56 IST)

திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்த இளம்பெண் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கட்டாயத் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் பைசாலாபாத் நகரை சேர்ந்த இளம்பெண்ணான மஹ்விஷ்(19) தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது குடும்பத்தாரை பிரிந்து ஆஸ்டலில் தங்கியபடி வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் உமர் டரஸ் என்பவர் மஹ்விஷ் மீது ஆசைப்பட்டு, அவரை ஒருதலையாக காதலித்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மஹ்விஷிடம் உமர் கேட்டுள்ளார். இதனை அந்த இளம்பெண் நிராகரித்து விட்டார்.
இதனால் மஹ்விஷ் மீது ஆத்திரத்தில் இருந்த உமர், மஹ்விஷ் பணியில் இருந்து திரும்பிய போது, அவரிடம் வம்பிழுத்துள்ளார். இதனை மஹ்விஷ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உமர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மஹ்விஷை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனையடுத்து கொலையாளி உமர் டரஸ்சை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.