1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (11:16 IST)

பிரனாயி விஜயனை அவமானப்படுத்தும் மோடி? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் பிரமர் மோடியை சந்திக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நேரம் கேட்டு வரும் நிலையில், மோடி இன்னும் அவருக்காக நேரம் ஒதுக்காமல் மறுத்து வருகிறார். 
 
கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு, மாநிலத்துக்கான நிதி போன்றவற்றை குறித்து பேசுவதற்காக பிரனாயி விஜயன் பிரதமரை சந்திக்க வேண்டும் என கேட்டு வருகிறார். 
 
இப்போது சமீபத்தில் கேட்ட போதும், பிரதமரை சந்திக்க அனுமதி வழங்க மறுக்கப்பட்டு, வேண்டுமானால் மத்திய உணவு, பொது விநியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வனை சந்தித்துக்கொள்ளவும் என பிர்தமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. 
 
கேரள மாநில முதலவர் அலுவலக தகவலின் படி பிரதமரை சந்திக்க இதுவரை நான்கு முறை அனுமதி கேட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.