1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (07:50 IST)

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

பாகிஸ்தானை புகழ்ந்து பேசுபவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் பிரச்சார மேடையில் அவர் பேசிய போது ’பாஜக ஆட்சிக்காக மட்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் இந்தியாவை வளர்ச்சி அடைவதற்காக போட்டியிடுகிறது என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு கொள்கையும் கிடையாது நாட்டை உயர்த்த வேண்டும் என்ற நோக்கமும் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தங்கி, இந்தியாவில் சாப்பிட்டு விட்டு, இந்தியாவில் அனைத்தையும் அனுபவித்துவிட்டு பாகிஸ்தானின் புகழ் பாடுபவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றும் பாகிஸ்தான் மக்கள் தொகை 23 கோடி, ஆனால் மோடி 25 கோடி மக்களை வறுமை போட்டுக்கு மேலே கொண்டு வந்துள்ளார் ஒன்றும் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகும்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆறு மாதங்களில் இந்தியாவில் ஒரு பகுதியாக மாறும் என்றும் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் பலர் கடந்த மூன்று ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளதாகவும் நமது நாட்டினரை கொலை செய்தவர்களை நாங்கள் எப்படி விட்டு வைப்போம் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva