1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (17:45 IST)

இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறைகளுக்கு விஜயம் செய்த பிரபல செஃப் அனஹிதா தோண்டி!

ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச்செல்ல மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறையில் போட்டி நிலவும் கடுமையாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வாரம், இந்த இரு பிரபல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் இல்ல சமையல் கலைஞர்களுக்கு புதிய சவால்களை செஃப் அனஹிதா தோண்டி முன்வைத்தார். 
 
ஒரு செஃப் மற்றும் கேட்டரிங் தொழில்முனைவோரான அவரது அம்மாவிடமிருந்து உத்வேகம் பெற்ற செஃப் அனஹிதாவுக்கு தான் எதிர்காலத்தில் சமையலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு செஃப்-ஆக ஆவது நிச்சயம் என்று இளவயதிலேயே தெரியும். இலண்டனின் லீ கார்டன் புளு என்ற சமையல் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவியான செஃப் அனஹிதா பிரெஞ்சு பேஸ்ட்ரிகள் மற்றும் சமையல் முறைகளில் நிபுணராக திகழ்கிறார்.
 
புழக்கத்திலிருந்து காணாமல் போய்விட்ட ரெசிப்பிக்களையும் மற்றும் சமையல் இடுபொருட்களையும் முன்னிலைப்படுத்த அவர் தீவிர முயற்சிக்கிறார். தனது சமையலில் நம் நாட்டின் பாரம்பரிய சிறுதானியமான தினை போன்றவற்றை தனது சமையலில் அவர் பயன்படுத்துவது இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். யங் செஃப் இந்தியா விருது மற்றும் டைம்ஸ் ஃபுட் விருது போன்ற பல விருதுகளை வென்றிருக்கும் அனஹிதா, அவரது பாரம்பரியமான பார்சி இன மக்களின் சமையல் முறையையும், கலையையும் எப்போதும் முன்னிலைப்படுத்தி பிரபலமாக்கி வருவதற்காக தேசிய அளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் புகழையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார். 
 
மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் கிச்சன் நிகழ்ச்சியில் “சேலஞ்ச் மாரத்தான்” என்பதை செஃப் அனஹிதா போட்டியாளர்களுக்கு சவாலாக முன்வைத்தார்.
 
இச்சவாலில் இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நான்கு பேர்கள் அடங்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டனர். போட்டியிலிருந்து நீக்கப்படுவதிலிருந்து தங்களை காப்பாற்றப்படுவதற்கு ஒவ்வொரு இல்ல சமையற்கலைஞரும் ஒரு திறன் பரிசோதனையில் சிறப்பாக தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. ஸ்கில் டெஸ்ட்கள் என அழைக்கப்படும் இந்த திறன் சோதனைகளில் செஃப்கள் கௌஷிக், ஸ்ரேயா, ராகேஷ் மற்றும் அனஹிதா ஆகியோர் முறையே ஒரு அக்கார்டியன் உருளைக்கிழங்கு, பைப்பிங் உத்திகளை பயன்படுத்தும் முறை,  ஒரு நேர்த்தியான மையோனைஸ்-ஐ தயாரிப்பது மற்றும் முட்டையை அவிப்பது ஆகியவற்றை மிக நேர்த்தியாக தயாரித்து நேர்த்தியான செய்முறை விளக்கத்தை வழங்கினர். 
 
மாஸ்டர்செஃப் இந்தியா தெலுகு கிச்சன் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு வெவ்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கு பிரிக்கப்பட்டனர். முதல் சவாலில் கப் கேக்குகளை அலங்காரம் செய்வதன் மூலம் அவர்களது சுகர் திறனை இல்ல சமையற்கலைஞர்கள் நிரூபிக்க வேண்டியிருந்தது. இச்சவாலில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட இரு இல்ல சமையற்கலைஞர்களுக்கு அடுத்த சவாலுக்காக ஒரு ஆதாய சலுகை வெகுமதியாக வழங்கப்பட்டது. இரண்டாவது சவால் என்பது ஒரு முழு சவாலாக இருந்தது. நான்கு நபர்களை உள்ளடக்கிய இரு குழுக்களும், மூன்று கோர்ஸ்களை உள்ளடக்கிய ஒரு உணவை, சிறுதானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு குழுவிலிருந்து மூன்று நபர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் சமைக்க முடியும் என்ற விதி, இந்த சவாலை சுவாரஸ்யமானதாக மாற்றியிருந்தது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு இல்ல சமையல்கலைஞர் காத்திருப்பு நிலையில் எப்போதும் இருந்தார் மற்றும் சமையலின்போது எந்த நேரத்திலும் அவர்களது குழு சகாக்களில் ஒருவருக்கு பதிலாக மாறி பங்கேற்க முடியும் என்பது ஒரு சுவையான திருப்பமாக இருந்தது.
 
தங்களது சமையல் திறன்களை வெளிப்படுத்தி இதில் வெற்றிகாண வேண்டுமென்ற அவர்களது கனவுகளை நிஜமாக்க உதவும் இந்த பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் முன்னேறி செல்கிறபோது செஃப் அனஹிதா முன்வைக்கப்படும் சவால்களில் வெற்றி காண மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு நிகழ்ச்சிகளின் போட்டியாளர்கள் விடாமுயற்சியோடு பங்கேற்கும் தருணங்களை இரசனையோடு பார்த்து மகிழ சோனி லைவ் சேனலை மறவாது டியுன் செய்யுங்கள்.