1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (12:41 IST)

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் யோகா பயிற்சி: மத்திய அரசு சுற்றறிக்கை!

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தினமும் 5 நிமிடம் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்பதும் இந்த தினத்தை பிரதமர் மோடி தான் ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசின் அனைத்து துறை ஊழியர்களும் 5 நிமிடம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என ஆயுஷ்மா அமைச்சகம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது 
 
ஊழியர்களாக யோகா என்னும் மொபைல் செயலியை உருவாக்கி அதில் யோகாசனம் பிரணாயாமம் தியானம் உள்ளிட்ட ஐந்து நிமிட ஆசனங்கள் குறித்த தகவல்களையும் மத்திய அரசு அளித்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் தினமும் 5 நிமிடங்கள் மத்திய அரசின் அனைத்து துறை ஊழியர்களும் யோகா பயிற்சி மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது