ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (11:22 IST)

ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில்  ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  
 
வட இந்திய மாநிலங்களில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் கேரளாவிலும் சில நாட்களாக கன மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது 
 
அதேபோல்  ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் மற்றும் மலப்புரம்  ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்ச எச்சரிக்கும் விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து கண்ணூர் கோழிக்கோடு வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
 
Edited by Siva