1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 15 ஜூலை 2023 (21:52 IST)

ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை

ராமநாதரபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் வரும் ஜூலை 17 ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டனம் ஆகிய பகுதிகளுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் விதமான வரும் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயஙும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி  கோவில் ஆடிப்புர திருவிழா 21 ல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.