திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2023 (10:09 IST)

மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.15000.. சத்தீஷ்கர் முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிலும்  பல அரசியல் கட்சிகள் பெண்களுக்கு பணம் வழங்க உள்ளதாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன
 
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அம் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் வாக்குறுதி அளித்துள்ளார்.  
 
மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளையும் அவர் கொடுத்துள்லார்.
 
பாஜக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் குப்பை தொட்டிக்கு செல்லும் என்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
நவம்பர் 17ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva