செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2023 (16:44 IST)

ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை.. சிவகாசி தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!

crackers
தீபாவளிக்கு ரூ,.6000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து சிவகாசி பட்டாசு ஆலை தொழில் அதிபர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக தீபாவளி தினத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவதை பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கிவிட்ட நிலையில் நாடு முழுவதும் தீபாவளிக்கு மட்டும் 6000 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு சுமார் பத்து சதவீதம் உற்பத்தி குறைந்த போதிலும் கடைசி நேரத்தில் பட்டாசு விற்பனை நன்றாக இருந்தது என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடும் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் பட்டாசு விற்பனை அமோகமாக ஆகி உள்ளதால் பட்டாசு தொழிற்சாலை அதிபர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்..

Edited by Siva