வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (15:36 IST)

தொழிலாளிக்கு லாட்டரியில் அடித்தது 'லக்'..ரூ. 12 கோடி பரிசு

தொழிலாளிக்கு லாட்டரியில் அடித்தது லக் ரூ 12 கோடி பரிசு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு என்ற பகுதியில் வசித்து வரும் தொழிலாளி ராஜனுக்கு ரூ. 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.
 
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு மற்றும் ஓணப்பண்டிகை ஆகிய காலங்களில் பம்பர் குலுக்கல் நடைபெறுவது வழக்கம்.
 
இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதியில் உள்ள ஆதிவாசி காலனியில் வசித்து வரும் ராகன் என்பவருக்கு  ரூ.  12 கோடி பரிசு கிடைத்துள்ளது. இவர் அப்பகுதியில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி ஆவார்.
 
இதுகுறித்து ராஜன் கூறியுள்ளதாவது :
 
நான் எப்போதும் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவதில்லை;  எப்போதாவது பணம் இருக்கும் போது வாங்குவேன். இந்த முறை லாட்டரி சீட்டு வாங்கியதற்கு எனக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.