1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:28 IST)

தீவிரவாதிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் -ஐ.நா. நடவடிக்கை எடுக்கவேண்டும் - இந்தியா வலியுறுத்தல்

போர் நடக்கும் பகுதிகளில் பெண்களை அடிமைகளாக வைத்து  தீவிரவாதிகள் பலர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.  அவர்களுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், பெண் பாதுகாப்பு மற்றும் அமைதி குறித்த விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்தியாவின் முதன்மைச் செயலாளர் பௌலோமி திருப்பதி கூறியது,
 
போர் நடக்கும் பகுதிகளில் அரசு சாரா போராளிகள் மற்றும் தீவிரவாதிகள், பெண்களை பிணைக் கைதிகளாக வைத்து, ஆள் கடத்தல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று  பாலியல் தொல்லை,வன்முறையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் அதன் அமைப்புகளை பட்டியலிட்டு ஐ.நா. மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அக்கூட்டத்தில் கலந்தோசித்துள்ளனர். 
 
பாலியல் வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவும், சிறுமிகளாகவும் உள்ளனர். அவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் சர்வதேச நாடுகள் தங்கள் எல்லைகளை கடந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 
போர் பகுதிகளில் இருந்து மாபெரும் அளவிலான அகதிகள் வெளியேறும் போதுதான் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று  பௌலோமி திருப்பதி .