திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (11:50 IST)

உல்லாசமாக இருந்த காதல் மனைவி: கட்டிப்போட்டு எரித்த கணவன்

ஹைதரபாத்தில் கணவன் ஒருவன் மனைவியின் கள்ளக்காதலையறிந்து அவரை கட்டிப்போட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டில் கள்ளக்காதல்களும் அதனால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் கள்ளத்தொடர்பு தவறில்லை என தீர்ப்பளித்திருந்தது.
 
ஹைதராபாத்தை சேர்ந்த சல்மான் என்ற இளைஞர் பஜ்சாப்பை சேர்ந்த சோனியா என்ற இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிம்மதியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் சோனியாவின் கள்ளக்காதலால் புயல் காற்று வீசியது.
 
சோனியாவிற்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதையறிந்த சல்மான், மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத சோனியா தொடர்ச்சியாக தன் கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
 
இதனால் கோபம் தலைக்கேறிய சல்மான், சோனியாவை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு விட்டு அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு ஓடியுள்ளார்.
 
சோனியாவின் அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர், சோனியாவின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய சல்மானை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.