மீன் சாப்பாடு செம!!!! சமையல்காரருக்கு ரூ.25,000 டிப்ஸ் அளித்த அமைச்சர்

fish
Last Modified வெள்ளி, 26 அக்டோபர் 2018 (07:40 IST)
கர்நாடகத்தில் அமைச்சர் ஒருவர் ருசியாக மீன் சாப்பாடு சமைத்த சமையல் காரருக்கு 25,000 டிப்ஸ் கொடுத்துள்ளார்.
 
கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பி ஜமீர் வேலை நிமித்தமாக மங்களூருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த “பிஷ் மார்க்கெட்” என்ற ஹோட்டலுக்கு சென்று பல வகையான மீன் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார்.
hotel
 
மீன் சாப்பாட்டை சாப்பிட்ட அமைச்சர் குறிப்பிட்ட சில மீனை சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கிவிட்டார். இவ்வளவு டேஸ்டாக சமைத்த ஹோட்டலின் செஃப்ஃபை அழைத்து, இதுநாள் வரை இந்த மாதிரி ருசியான மீன் உணவை சாப்பிட்டதில்லை என பாராட்டினார். தன் தட்டில் இருந்த உணவை எடுத்து செஃப்ஃபிற்கு ஊட்டி மகிழ்ந்தார்.  பின்னர் அவருக்கு 25,000 டிப்ஸ் கொடுத்து அவரை பாராட்டினார். மேலும் அந்த செஃப் ஹஜ்பயணம் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
minister
 
அமைச்சரின் இந்த திடீர் சர்ப்பரைசால் அந்த செஃப் என்ன செய்வதென்றே தெரியாமல் சந்தோஷத்தில் மிதந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :