1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (14:47 IST)

பரபரப்பான சாலையில் இளம்பெண் கற்பழிப்பு: வீடியோ எடுத்த பொதுமக்கள்

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வீடியோ எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
கஞ்சி சிவா என்ற வாலிபர் இளம்பெண் ஒருவரை சாலையோரத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். அந்த வீடியோவில் பொதுமக்கள் பலரும் கடந்து செல்வது தெளிவதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை என்பது வேதனைக்குரியது. இதுதொடர்பாக சமூக ஆர்வாளர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் வீடியோ எடுத்ததற்கு பதில் அந்த பெண்னை காப்பாற்றி இருக்கலாம். இருந்தாலும் அந்த வீடியோ காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்ததற்கு உதவியுள்ளது என்று கூறியுள்ளார்.