திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 21 டிசம்பர் 2019 (17:47 IST)

கடலில் இரு சொகுசு கப்பல்கள் மோதல்... பரவலாகும் வீடியோ

உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. 
இந்நிலையில், வெளிநாட்டில் இரு சொகுசு கப்பல்கள் கடலில் சிறிது தூரம் இடைவெளிவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
 
அப்போது, திடீரென்று, இடது புறம் நிறுத்தப்பட்டு இருந்த கப்பல், இன்னொரு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தை நெருங்கி  அந்த கப்பல் மீது பலமாக மோதியது.
 
இதில், வலது புறம் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பலத்த சேதம் ஏற்பட்டது.  இந்நிலையில் இரு கப்பல்களிலும் பயணிகள் இருந்தம்னரா என்பது தெரியவில்லை.

ஆனால் இந்த வீடியோ டிக் டாக் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டு இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.