1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 26 டிசம்பர் 2019 (18:41 IST)

உடல் உறுப்புகள் போன்ற ஆடை அணிந்து பாடம் நடத்தும் ஆசிரியர்...வைரல் வீடியோ

உடல் உறுப்புகளைப் போன்ற ஆடையை அணிந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியை வெரோனிகாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
ஸ்பெயின் நாட்டில் உள்ள வாலாயோலிட் என்ற  பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா .இவர் வயது 43. இவர் அங்குள்ள பள்ளியில் 8 முதல் 9 வயது வரை உள்ள மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில், தன் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் உயிரியல் பிரிவு என்பது புரியாது என்பதால், புது உத்தியைக் கையாண்ட ஆசிரியை வொரோனிகா, உடல் உறுப்புகளைப் போன்ற உடையை அணிந்து கொண்டு மாணவர்களுக்கு எளிய முறையில், பாடம் நடத்தி புரிய வைத்துள்ளார். இவரது பாடம் நடத்தும் முயற்சியை பார்த்து வியந்துபோன அவரது கணவர், வெரோனிகா பாடம் நடத்தும்போது, அதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அவை வைரல் ஆகி வருகிறது. 
 
வித்தியாசமான முயற்சிக்கு என்றுமே மதிப்பும் பாராட்டுகளும் உண்டு என்பது ஆசிரியர் வொரோனிகா விசயத்தில் நிரூபனமாகியுள்ளது.