திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (11:20 IST)

வீட்டருகே சிறுமியைக் கடத்த முயன்ற நபர்கள் – அடித்துத் துவைத்து மகளைக் காப்பாற்றிய தாய்!

டெல்லி அருகே வீட்டுக் குடியிருப்புக்கு அருகேயே சிறுமியைக் கடத்த முயன்ற இருவரை தாக்கி குழந்தையைக் காப்பாற்றியுள்ளார் தாய் ஒருவர்.

கிழக்கு டெல்லி அருகே உள்ள குடியிருப்பில் வசிப்பவர் அந்த பெண். அவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அந்த குடியிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அவர் தண்ணீரை எடுக்கும் நேரத்தில் அவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கடத்த முயல, ஓடிச் சென்று வண்டியைக் கீழே இழுத்துள்ளார். அதனால் பின்னால் அமர்ந்து இருந்தவர் எழுந்து ஓட ஆரம்பித்துள்ளார். முதலில் வண்டியை ஓட்ட முடியாமல் இழுத்து பிடித்துள்ளார் அந்த பெண்.

ஆனால் அந்த நபர் எப்படியோ வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிவிட வண்டி எண்ணை வைத்து அவர்கள் இருப்பிடத்தைப் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குழந்தையின் மாமாதான் பணத்துக்காக குழந்தையைக் கடத்த சொல்லி அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளது தெரிந்துள்ளது. இதன்பின்னர் அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.