வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (11:48 IST)

கர்ப்பம் என தெரிந்த ஒரு மணி நேரத்தில் பிரசவம்! – இந்தோனேஷியாவில் ஆச்சர்யம்!

இந்தோனேஷியாவில் பெண் ஒருவர் தான் கர்ப்பமானதாக உணர்ந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக குழந்தையை பெற்றெடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷ்யாவின் மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்தவர் ஹெனி நுரேனி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வழக்கம்போல வீட்டு வேலைகளை பார்த்து வந்த நுரேனி வயிற்றில் ஏதோ அசைவு தெரிவதை உணர்ந்துள்ளார். வயிற்றில் சிசு இருப்பதாக உணர்ந்த அவர் உடனடியாக தனது பெற்றோரிடம் இதை சொல்லியுள்ளார். அவர்கள் மருத்துவமனைக்கு நுரேனியை அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு சென்ற சில நிமிடங்களிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பமான சில மணி நேரங்களில் குழந்தை பிறந்திருப்பதாக இந்த சம்பவம் இந்தோனேசியாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நுரேனிக்கு சிசு இருப்பதால் வயிறு பெரிதாக கூட இல்லையாம், கடந்த மாதங்கள் அனைத்திலும் அவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டும் இருக்கிறது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறுகையில் 25 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இவ்வாறாக நடக்க சாத்தியம் உள்ளதாக கூறுகின்றனர். சிசி வயிற்றில் இருந்தாலும் அது தெரியாத வண்ணம் மாதவிலக்கு ஏற்படுவது, திடீரென குழந்தை பிறப்பது ஆகியவை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர்கள், ஒரு மணி நேரத்தில் கர்ப்பமாகி குழந்தை பிறக்கவும் வாய்ப்பில்லை என கூறியுள்ளனர்.