செவ்வாய், 9 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (21:40 IST)

திருமணமான பெண்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பணம் பெற்றவுடன் காதலர்களுடன் ஓட்டம்..!

loan
திருமணமான 11 பெண்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் பெற்றவுடன் தங்களுடைய காதலர்களுடன் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதில் சில பெண்கள் தவறான முறையில் இந்த திட்டத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் பணம் வாங்க வேண்டும் என்பதற்காகவே போலியாக திருமணம் செய்து கொண்டு பணம் பெற்றவுடன் திருமணம் செய்த கணவர்களை கழட்டி விட்டு காதலர்களுடன் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 11 திருமணமான பெண்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முதல் தவணை வரும் வரை காத்திருந்து பணம் வங்கி கணக்கில் வரவு வைத்தவுடன் தங்களின் காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பெண்களின் கணவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த பெண்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த ஆண்டும் இந்த திட்டத்தில் தவணைத் தொகை கிடைத்தவுடன் சில பெண்கள் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் அதேபோல் நடந்துள்ளதை அடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva