புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (15:56 IST)

மாமனார், அவரின் சகோதர்கள், கணவனின் சகோதர்கள்... பலரின் காம இச்சைக்கு பலியான பெண்

பெண் ஒருவரை அவரது மாமானார், மாமானரின் சகோதரர்கள், கணவனின் சகோதர்கள் ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்தது பேரதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலி என்னும் பகுதியில் கணவருடன் வசித்து வந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் தெரிவித்ததுள்ளதாவது, 
 
எனது கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். அவரின் இந்த பழக்கத்தை பயன்படுத்திக்கொண்டு என்னை பாலியல் ரீதியாக எனது கணவரின் குடும்பத்தார் கொடுமைப்படுத்தினர். 
 
சம்பவ நாளன்று எனக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து எனது மாமனார், அவரது சகோதர்கள், என் கணவனின் சகோதர்கள் ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்தனர். இதை பற்றி நான் அவர்களிடன் கேட்டு சண்டைபோட்ட போது என்னை தாக்கி மீண்டும் பல முறை பலாத்காரம் செய்தனர். 
 
இதை என் கணவரிடம் கூறிய போது அவரும் இதை தட்டிகேட்கவில்லை. அவர் முன்னிலையிலேயே என்னை பலாத்காரம் செய்தனர். நான் அங்கிருந்து தப்பித்து இப்போது என் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டேன். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுங்கள் என கதறிக்கொண்டு கூறியுள்ளார். 
 
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.