வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (11:17 IST)

19 வயது கர்ப்பிணிப் பெண்ணக் கூட்டுப்பலாத்காரம் செய்த கும்பல் – காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு !

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது காதலனோடு சென்ற 19 வயது பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளததால் அவரது காதலன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் அதேப் பகுதியில் வசிக்கும் ஆண் ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதால் அந்தப் பெண் இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜூலை 13 ஆம் தேதி மோட்டார் பைக்கில் சென்று தங்கள் ஊருக்கு கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

அதில் அந்த ஆண் நிலைதடுமாற அவரை இரும்புக் கம்பியால் தாக்கி அவரது கண் முன்னாலேயே அந்த பெண்ணை 5 பேரும் கட்டாய வல்லுறவுக் கொண்டுள்ளனர். இதனால் அந்தப் பெண்ணின் கர்ப்பம் கலைந்துள்ளது. இந்த விஷயத்தை வெளியே சொன்னால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர். அதனால் அவர்கள் இருவரும் இதை வெளியே யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் தனது காதலியைக் காப்பாற்ற முடியாத காரணத்தால் மனமுடைந்த அந்த பெண்ணின் காதலன் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தற்கொலை பற்றி விசாரணை மேற்கொள்ளும் போது அந்த கும்பலை சேர்ந்த ஜிதேந்திரா என்ற ஒருவர் சிக்கியுள்ளார். அதையடுத்துப் போலிஸ் மேற்கொண்டு விசாரணையை நடத்த இந்த கூட்டு வல்லுறவு சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகி போலிஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.