வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (08:20 IST)

இந்தியாற்கு ஏற்ற கொரோனா தடுப்பூசி எது? – மருத்துவ நிபுணர்கள் ஆய்வு!

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு எந்த தடுப்பூசியை வாங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கொரோனாவிற்கு வெற்றிக்கரமாக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி 92 சதவீதம் செயல்திறன் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பைசர் தடுப்பூசி 90 சதவீத செயல்திறனும், மாடர்னா தடுப்பூசி 94.5 சதவீதம் செயல்திறனும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளில் இந்தியாவிற்கு எந்த தடுப்பூசி உகந்ததாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு பின்னர் தடுப்பூசிகள் வாங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ப்ரோட்டின் அடிப்படையிலான தடுப்பூசி இந்தியாவில் சிறப்பாக பலனளிக்கும் என்றும், அதை சேமித்து வைக்கும் வெப்பநிலையில் இந்தியாவிற்கு சரியாக இருக்கும் என்றும் சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.