1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (17:10 IST)

மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் சுமந்த மனைவி: வைரல் புகைப்படம்

மாற்றுதிறனாளி கணவனுக்கு சான்றிதழ் வாங்க அவரது மனைவி தோளில் சுமந்து சென்ற புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விம்லா, இவரது கணவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவரது கால் துண்டிக்கப்பட்டது.
 
இதனால் அவருக்கு மாற்றுதிறனாளி சான்றிதழ் வாங்க விம்லா முயற்சித்துள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சான்றிதழ் பெற அவரது கணவரை புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து, விம்லா சான்றிதழ் வாங்குவதற்காக தனது  கணவனை முதுகில் சுமந்து கொண்டு வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்த  புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.