1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (13:35 IST)

பெண்களை ஏமாற்றி உல்லாசம் - வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்

பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, வீடியோ எடுத்து மிரட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 
பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், சிக்மகளூருவை சேர்ந்த கவுரி சங்கர் என்பவர் முகநூல் மூலம் பழக்கமானதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாய் கூறி தன்னை பலமுறை அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னிடம் உல்லாசம் அனுபவித்த போது தனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார்.
 
இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு சில அதிர்ச்சிகள் காத்திருந்தது. கவுரி சங்கருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், அவரின் இந்த செயல்களுக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் என்பதும், விவாகரத்து ஆன பெண்களை குறி வைத்து அவர் தனது மோசடிகளை அரங்கேற்றியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. 
 
அவர் மீது புகார் கொடுத்த பெண்ணும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர்தான். அவரின் தானும் விவாகரத்து பெற்றவர் எனக்கூறியே கவுரி சங்கர் ஏமாற்றியுள்ளார். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கவுரி சங்கர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.