பாக். டீ விளம்பரத்தில் அபிநந்தன்? விங் கமெண்டருக்கு வந்த சோதனை...
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
இந்த தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு அபிநந்தன் அதாவது மார்ச் 1 அன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் முன் அவரின் வீடியோக்கள் பல வெளியானது. அதில் ஒரு வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக்கொண்டே பேசுவது போன்ற வீடியோவும் வெளியானது.
இந்நிலையில் தற்போது இணையத்தளங்களில் அபிநந்தன் பாகிஸ்தானை சேர்ந்த டபல் டீ என்ற டீ நிறுவனத்தின் விளம்பரத்தில் நடத்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த அபிநந்தன் அந்நாட்டு டீ நிறுவன விளம்பரத்தில் நடித்தரா? என் கேட்க வேண்டாம். இந்த வீடியோ விஷமிகள் சிலரால் எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.