இந்த நோய்களுக்கெல்லாம் அலோபதியில் மருந்து இருக்கின்றதா? பாபா ராம்தேவின் 25 கேள்விகள்
யோகா குரு மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ் சமீபத்தில் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் தனது கருத்தை வாபஸ் பெற்றார். இந்த நிலையில் பாபா ராம்தேவ் தனது டுவிட்டரில் அலோபதி மருத்துவர்களுக்கு 25 கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
உயர் ரத்த அழுத்தம், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை நீரிழிவுக்கு அலோபதி நிரந்தர நிவாரணம் அளிக்குமா?
தைராய்டு, கீல்வாதம், பெருங்குடல் அழற்சி, மற்றும் ஆஸ்துமாவுக்கு அலோபதியில் நிரந்தர தீர்வுக்கான சிகிச்சை உள்ளதா?
காசநோய் மற்றும் சின்னம்மைக்கு சிகிச்சையை கண்டறிந்தது போல் கல்லீரல் பாதிப்புகளுக்கு சிகிச்சையை ஏன் கண்டறியவில்லை?
இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை அல்லாத தீர்வு அலோபதி மருத்துவத்தில் என்ன உள்ளது?
கொழுப்பை குறைக்க என்ன சிகிச்சை உள்ளது? ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை உள்ளதா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.