செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:14 IST)

கள்ளக்காதலால் கதகளி ஆடிய மனைவி: கல்லால் அடித்துக் கொன்ற கணவன்

கள்ளக்காதல் விபரீதத்தால் கணவன் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரவி கடந்த 14 வருடங்களாக வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்தார். 
 
கணவன் வெளிநாட்டிற்கு சென்றிருந்த வேளையில் ராணி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையறிந்த ரவி வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பினார்.
 
வீட்டிற்கு வந்த அவர் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரவி, ராணியை கல்லால் அடித்தே கொன்றுள்ளார். பின்னர் மனைவி வண்டியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.