வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (16:42 IST)

வீட்டு உணவை சாப்பிடாமல் பானி பூரி வாங்கிவந்த கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

மகாராஷ்டிராவில் கணவர் தன்னிடம் சொல்லாமல் பானி பூரி வாங்கி வந்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் அம்பேகான் பகுதியைச் சேர்ந்த தமப்திகள் காஹினிநாத் மற்றும் பிரதிக்‌ஷா. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குடும்ப வாழ்க்கை எப்போதுமே சண்டை சச்சரவுகளோடு நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மனைவி வீட்டில் சமையல் செய்து கணவருக்காக காத்திருந்த நிலையில் காஹினிநாத் மனைவியிடம் சொல்லாமலேயே பானி பூரி வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை எழுந்துள்ளது. இதனால் மன விரக்தியடைந்த பிரதிக்‌ஷா மறுநாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காலம் உயிரிழந்துள்ளார்.