1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மே 2024 (13:33 IST)

கணவனை கட்டிப்போட்டு ஆணுறுப்பில் சிகரெட் சூடு வைத்த மனைவி.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

கள்ளக்காதலை தட்டிக் கேட்ட கணவனை மயக்க மருந்து கொடுத்து அடித்து துன்புறுத்தியதோடு ஆணுறுப்பில் சிகரெட் சூடு வைத்த மனைவியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்ததை அவரது கணவன் கண்டுபிடித்து கண்டித்ததை அடுத்து ஆத்திரமடைந்த மனைவி, கணவனுக்கு பாலில் மயக்கம் மருந்து கொடுத்து உள்ளார்.  மனைவி இப்படிப்பட்டவள் தான் என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த கணவன் சிசிடிவி பொருத்திருந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் வைத்திருந்த அந்த சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசில் ஒப்படைத்து இருக்கிறார்.

அந்த சிசிடிவியில் கணவனை கட்டிப்போட்டு மனைவி அடித்து துன்புறுத்தும் காட்சி, சிகரெட்டால் ஆணுறுப்பில் சூடு வைத்த காட்சி இருப்பதை அடுத்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவருடைய மனைவியை கைது செய்துள்ளனர்.

அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இது குறித்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவி அடித்து துன்புறுத்திய சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran