செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 18 செப்டம்பர் 2021 (19:12 IST)

பரவலாகும் டெங்கு தொற்று ...அச்சத்தில் மக்கள்

இந்தியாவில்  கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. விரைவில் கொரொனா 3 அலை பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கனவே கொரொனா தொற்று பாதிப்பு இருக்கும் நிலையில் டெங்கு தொற்று அதிகரித்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் அச்சுறுத்தி வந்த டெங்கு வந்த நிலையில் தற்போது 24 மணிநேரத்தில் மத்திய பிரதேசத்தில்  22 பேருக்கு டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தப் பாதிப்பு  225 ஆக அதிகரித்துள்ளது.  

எனவே கொரொனாவுக்கு மத்தியிலும் அம்மாநில அரசு டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.