மெஹபூபா, உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டது ஏன்?
மெஹபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோரின் செயல்பாடுகள் காஷ்மீரின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பது போல இருக்கிறதாம். அதிலும் இருவரும் சமீபமாக செய்த விஷயங்கள் காஷ்மீர் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இல்லையாம்.
இவர்கள் வெளியில் செல்வது காஷ்மீரில் கூடுதல் பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். மக்களின் அமைதிக்கு எதிராக இவர்கள் செயல்படுவது போல இருப்பதால், காஷ்மீரில் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருவரையும் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.