ஒரு மனிதன்… 120 கோடி மக்கள் – காஷ்மீர் விவகாரத்தில் அனுராக் காஷ்யப் கருத்து !
காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கும் , பாஜகவுக்கும் எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் கலைத்துறையில் இருந்து வெளியாக ஆரம்பித்துள்ளன.
மாநிலங்களவையில் நேற்றுக் காலை 11 மணிக்கு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கபடடுவதாகவும் அமித்ஷா அறிவித்தார். இதற்குப் பலமான ஆதரவுகளும் எதிர்ப்புகளும் நாடு முழுவதும் பலமாக எழுந்துள்ளன.
இந்த நடவடிக்கைப் பற்றி இந்தி சினிமா இயக்குனர் அனுராக் காஷ்யப் ’ஒரு மனிதன், 120 கோடி மக்களின் நலனுக்காக செய்ய வேண்டிய சரியான விஷயம் என்னவென்று, தனக்குத் தெரியும் என்று நினைக்கிறான் . இருப்பதிலேயே இது தான் அச்சமூட்டுவதாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார். இவர் தொடர்ந்து பாஜக அரசின் மேல் விமர்சனங்களை வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, இதேப்போல சஞ்சய் சூரி மற்றும் சைரா கான் உள்ளிட்டோர்களும் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் அமலாபால், கங்கனா ரனாவத், அனுபம் கேர், ஆகியோர் ஆதரவாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.