ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 9 நவம்பர் 2019 (11:59 IST)

அவசர அவசரமாய் அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது ஏன்?

அவசர அவசரமாய் அயோத்தி தீர்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. 

 
பாபர் மசூதி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு 3 தரப்பு உரிமை கோரியது. சன்னு வபு வாரியம், நிர்மோஹி அஹாரா , ராம் லல்லா அமைப்புகள் அலஹாபாத் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இம்மூன்று அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இடத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம் என அளித்த நீதிமன்றத்தில்  இந்த தீர்பை எதிர்த்து மூன்று அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த வழக்கை முடிக்க மூன்று பேர் கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டும் தீர்வுகள் எட்டப்படவில்லை. 
 
இதனையடுத்து, இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆம், நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அயோத்தி நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் உச்சநீதிமன்றம் ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது. 
இந்நிலையில் நவ.,14 அல்லது 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டத்தற்கான காரணம் என்னவென சில தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவல் தெரிவிப்பதாவது, 
 
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ரஞ்சன் கோகாய் நவ.,17 ம் தேதி ஓய்வுபெற்றாலும், அவரது கடைசி வேலை நாள் நவ.,15 ஆகும். இதனை கருத்தில் கொண்டே அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நவ.,14 அல்லது 15 அன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
பொதுவாக ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்கும் படி வாதி அல்லது பிரதிவாதி தரப்பில் கேட்கப்படலாம் என்பதால் அந்த வழக்கு தொடர்பான பணிகள் அடுத்த 2 நாட்களுக்கு நடத்தப்படும். இதனால் முன்னரே வழங்கப்பட வேண்டும்.
 
அயோத்தி வழக்கு உணர்வு ரீதியிலான விவகாரம் என்பதால் சமூக பிரச்னை ஏதும் ஏற்பட்டு விட இடம் தரக் கூடாது என்பதால் வெள்ளிக்கிழமை இரவு (நேற்று) திடீரென தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு, காலையில் கோர்ட் நேரம் துவங்கியதும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
இன்றும் நாளையும் பெரும்பாலும் விடுமுறை என்பதாலும், கலவரம் ஏதுமின்றி கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பதற்காவும் திட்டமிட்டே சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.