திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஜூலை 2018 (14:10 IST)

கருணை மதிப்பெண்களுக்கு தடை ஏன்? புதிய தகவல்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது என்பது குறித்து சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வின் மொத்த மதிப்பெண் 720 என்பது தெரிந்தது. ஆனால் மதுரை ஐகோர்ட் கிளையின் 196 கருணை மதிப்பெண் உத்தரவை செயல்படுத்தினால் ஒருசில மாணவர்களுக்கு 720 மதிப்பெண்களுக்கும் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ரோல் நம்பர் 512017442 என்ற மாணவர் ஏற்கனவே 554 மதிப்பெண்கள் நீட் தேர்வில் பெற்றுள்ளார். இவருக்கு 196 கருணை மதிப்பெண்கள் கொடுத்தால் அவருடைய மொத்த மதிப்பெண் 750 ஆக மாறிவிடும். 720 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய ஒரு மாணவர் எப்படி 750 மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கேள்வியை சி.பி.எஸ்.இ எழுப்பியது.

இதன் காரணமாகவே இந்த வழக்கில் கருணை மதிப்பெண்களுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் எப்படி முடிக்க போகிறது என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.