திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (07:43 IST)

நவாஸ் ஷெரிப் மகளுடன் கைது: பாஸ்போர்ட் பறிமுதல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் இன்று லண்டனில் இருந்து பாகிஸ்தானில் இறங்கியவுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் இருவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீக்கியது. அதன்பின்னர் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்டிருந்த நிலையில் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றங்களில் நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
 
 இந்த வழக்கின் விசாரணை முடிந்து சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில், நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நாடு திரும்பிய நவாஸ் மற்றும் அவரது மகளை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் அவர்கள் இருவரின் பாஸ்போர்ட்டையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
 
நவாஸ் ஷெரிப் கைதால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது