புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2017 (18:00 IST)

நிலவேம்புக்கு எதிராக திடீர் போர்க்கொடி ஏன்?

நிலவேம்பு கசாயம் டெங்குவை குணப்படுத்துவது மட்டுமின்றி நல்ல நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. இதை ஒரு குறிப்பிட்ட அளவு சித்த மருத்துவரின் அறிவுரைப்படி தொடர்ந்து குடித்து வந்தால் நோய் கிட்ட அண்டாது. 



 
 
நிலவேம்பு கசாயம் பிரபலம் அடைந்தால் நாட்டில் உள்ள பாதி மருத்துவமனைகள் மூடப்படும் நிலைக்கு வந்துவிடும். இதனால் தான் ஊடகங்கள் மூலம் விஷமப்பிரச்சாரத்தில் சிலர் டெங்குவுக்கு எதிராக ஈடுபட்டுள்ளனர். "எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் மக்களுக்கு நில வேம்பு நன்னீர் வழங்கப்படுகிறது? " என்று கேட்கும் ஒருசில மருத்துவர்களின் பின்னால் பகாசுர அலோபதி மருந்து நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
 
எய்ட்ஸ், காச நோய், சிக்கன்குனியா போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கின்றது என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்தை இன்றைய சூழலில் நாம் முற்றிலும் புறக்கணித்து விட முடியாது. அவசர சிகிச்சைக்கு அலோபதி அவசியம். ஆனால் , இதுவரை சிக்கன் கூனியா , டெங்கு மற்றும் தற்போது பரவிவரும் பல மர்மக் காய்ச்சல்களுக்கு அலோபதியில் மருந்தில்லை என அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இந்த நிலையில் அன்று சிக்கன் கூனியா , இன்று டெங்கு நோயயை கட்டுப்படுத்தும் நமது நிலவேம்பை ஏன் அவர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள்? 
 
ஏற்கனவே மக்கள் இயற்கை உணவுகள் பக்கம் திரும்பியதுப்போல் , தமிழ் மருத்துவம் பக்கமும் முற்றிலும் திரும்பி விடுவார்களோ என அலோபதி உலகம் அஞ்சுகிறது. எனவே மக்கள் நோயில்லா வாழ்க்கை வாழ மீண்டும் சித்த மருத்துவத்திற்கு திரும்ப வேண்டிய காலம் கனிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது,.